About Geeks Gadget Theme

Blogger Widgets

உலகம் முழுவதும் பிரபலமாகும் சூப்பர் ஸ்டாரின் Mash up - On Youtube

நம் அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் புத்தும் புதிய Mash up நான் வெளியிட்டு இருக்கிறேன். வெளியிட்ட சில நிமிடங்களிலே பல்லாயிர கணக்காணோர் பார்த்து பாராட்டினர். இது மிகவும் அற்புதமாக உள்ளது.
என்ன YouTube channelலைச் Subscribe செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். தலைவரின் ரசிகர்கள் தங்கள் பதிவிலையும் இதனைப் பகிரலாம். அதற்கான் Code.

உலக தமிழ் தலைவன் பாரதியார்

ஒரு துளி பேனா மை 10 கோடி பேரை மாற்றும் என்பதை நிறுபித்தவர் பாரதியார். எழுத்தாற்றல் மூலம் இந்தியாவையும் தமிழையும் அடுத்த கட்டத்துக்கு இழுத்து சென்றவர் இவர். இவரின் புகழ் சொல்ல என் ஒரு ஆயுள் போதாது. எனினும், சுருக்கமாக சில பத்திகளில் சொல்கிறேன்! கேளுங்கள்

 

மகாகவி பாரதியார்

இன்று 25 வயது இளைஞனை தமிழில் ஒரு கவிதை எழுத சொன்னால் கூட திணருவான். அந்த இழிநிலைக்கு காரணம் அவன் மட்டுமல்ல. அவன் வாழ்ந்த சமுகமும் தான். இதை விட மோசமான சமுகம் அன்று இருந்தது. ஆனால், அன்றே 11 வயதில் கவி பாட ஆரம்பித்தவர் தான் இந்த பாரதியார்.

 

அப்படி என்ன சாதித்தார்

அந்த காலத்தில் புலமையையே வாழ்கையாக கொண்டவர்கள் பல லட்சகணக்காணோர். ஆனால், 19-20ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான கவிஞர் இவர் தான். இவரின் கவிதைகள் ஹிட்லரை கூட புத்தர் ஆக்கும் சக்தி படைத்தது. ஆனால், அவை யாவும் அரசாங்கத்திற்கு எதிராக இருந்தது.

அதனால் அவர் வாழும் வரை அவரின் புகழ் உலகிற்கு தெரியாமல் போனது. ஆனால், அவர் மறைந்த பிறகு அவரின் புகழ் உலகின் மறுமுனையில் இருக்கும் அமேரிக்க வரை பரவியது. அவர் தன் தாய்நாடு மற்றும் நாய்மொழி மீது கொண்ட பற்று கடலைவிட பெரியது. இவர் பாடலில் இருக்கும் உவமைகள் மற்றும் இலக்கணங்கள் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

 

புலவர்

இவருக்கு உலகின் மற்ற புலவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பெரும்பாலான புலவர்கள் ஒரே மொழியை கற்று கொண்டு அது தான் உயர்ந்தது என புலம்புவர். சிலர் தன் தாய்மொழியை விட்டு பிற நாய் மொழியை தேடி செல்லுவர். இந்த இரண்டு குள்ளநை கூட்டங்களிலும் பாரதியார் சேரமாட்டார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். எனினும் தன் தாய்மொழியை ஒரு பொழுதும் விட்டுகொடுக்க மாட்டார். தாய்மொழிக்கே தன் அனைத்து தொண்டுகளையும் செய்தார். என்ன ஆனாலும், மற்ற மொழி புலவர்களையோ நாட்டினரையோ பழிக்க மாட்டார்.

 

புதுகவிதை பாரதியார்

திருவள்ளுவரும் கம்பரும் அதிமேதாவியாக இருக்கலாம். ஆனால், திருக்குறளையும் கம்பராமயணத்தையும் கற்பவர்கள் அனைவரும் திறமைசாலி என கூறமுடியாது. சங்க காலத்து புலவர்கள் தமிழ் இலக்கணத்தை சிறிது விட்டு கொடுக்க மாட்டனர். இதனால், கல்வி கற்காத முட்டாள்களுக்கு இலக்கியத்தின் சுவை எட்டாக்கனியாகவே இருந்தது.

பாரதியாரைப் பற்றி சிவகுமார்

அதை தகர்ந்தெரிந்தவர் பாரதியார். அவரின் படைப்புகள்  எல்லோருக்கும் புரியும். மிக எளிமையாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை எளிமையாக்கிய பெருமை இவரையே சாரும். அவர் எழுதிய புதுகவிதைகளில் சில

 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி

 

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

 

சக்திப் பேய் தான் தலையொடு தலைகள் முட்டிச்
சட்டச் சட சட சடவென்றுடைபடு தாளம் கொட்டி அங்கே
எத்திகினிலும் நின்விழி அனல் போய் எட்டித்
தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை

 

நாட்டுபணி

நாட்டுபற்று என்பது மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவசியமானது. இவர் நாட்டுகாக கத்தியும் தூக்கவில்லை. துப்பாக்கியையும் தூக்கவில்லை. இவர் எடுத்தது அவற்றை விட கூர்மையான ஆயுததை; அதைவிட வலிமையானவற்றை : பேணா.

அவர் நாட்டுக்கு செய்த பணி தன் பேணாவை கொண்டு தான். அவர் நாட்டுமக்களை வெறும் செய்தி தாள்கள் மூலம் எழுச்சியடைய செய்தார். சுதேசிமித்திரன் என்னும் இதழ் மூலம் தமிழ் நாட்டையே தலைகீழாக மாற்றினார்.

அவரின் புகழ்பெற்ற கவிதைகள்:

பட்டினில் உடையும் பஞ்சினில் ஆடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்."

வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

 

நான் அவரை மாதிரி ஒரு கலைஞன் பிறக்க வாய்பே இல்லை என்று பொய் சொல்லவில்லை. என்றும் ஒரு கலைஞனை மிஞ்சும் இன்னொரு கலைஞன் பிறக்க தான் செய்வான். இது இயற்கை.

பாரதியாரை போற்றும் கவிஞர் வாலி

ஆனால் எவ்வித முதலீடுமின்றி 10 கோடி மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டிய மகான் இவர் மட்டும் தான். இவருக்காக ஒரு நிமிடம் தலைவணங்குவோம். பாரதியார் என் தலைவன் என்று தலை நிமிர்த்தி சொல்லுவோம்.

பள்ளி மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 1000 விஷயங்கள் | 1-10

பள்ளி என்பது 19 நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்தது. இப்பொழுதும் தமிழ் நாட்டில் பள்ளி என்னும் பெயரில் தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, ஆங்கிலம் என்னும் விஷத்தால் ஒழுக்கத்தை அழிக்க எண்ணுகின்றனர்.


 1. உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதை யார் சொன்னாலும் செய்யாதீர்கள். ஆனால், ஒன்று. அது ஏன் பிடிக்கவில்லை என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்.
 2. ஒரு வேளை ஆசிரியர் உங்களை அவமான படுத்தினால், அந்த ஆசிரியரால் உங்களுக்கு விளையும் பயன் குறைவு என்பதை உணருங்கள். அதுவே, உங்களால் அந்த ஆசிரியாருக்கு பெருமை சேர்க்க முடியாமல் போனால், நீங்கள் மாணவராக இருக்க தகுதியே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 3. மற்றவரை விட சற்று வித்தியாசமாக இருக்க முயலுங்கள். 99% திரைபடங்கள், வேற்று மொழி, போலி நண்பர்கள், மணப்பாட கல்வி, அதிக விளையாட்டு முதலியன உங்கள் வாழ்கையை வேரோடு அருக்கும்.
 4. இந்த வயதில் தீயவனாக மாறிவிட்டால், மனிதனாக மாறுவது கடினம். எனவே தீமையிலிருந்து விலகியே இருங்கள்.
 5. நீங்கள் பேசுவதை பலர் கேட்க மாட்டார்கள். அதை விட்டுவிடுங்கள். ஆனால், பலர் உங்களுக்கு பேசுவதர்கான வாய்பையே வழங்கமாட்டார்கள். அவர்களால் உங்களுக்கு பயனேதுமில்லை.
 6. சாதி, மொழி, இனம், நாடு என எதிலும் யாரையும் வேற்று மனிதாராக பார்க்காதீர்கள்.
 7. பள்ளி முடிந்தவுடம் ஒன்று நீங்கள் சாப்பிடவேண்டும். அல்லது விளையாட வேண்டும். தொலைகாட்சியோ அல்லது கண்னியோ வேண்டாம்.
 8. உங்கள் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் வருந்த வேண்டாம். உங்கள் மதிப்பெண் மூலம் உங்கள் அறிவை காட்ட முடியாது.
 9. அறிவியல் மற்றும் கணக்கு அல்லது இலக்கியம் மற்றும் இலக்கணம். இந்த இரண்டு பாடத்தில் ஏதாவது ஒன்றிலாது கெட்டி காரணாக இருங்கள்.
 10. நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயமில்லை. வெற்றி பெறுவதற்கான சக்தியை பெற்றால் போதும். குறைந்தபட்சம் பெற முயறிசிக்கவாவது வேண்டும்

இத சொல்ல உங்கலுக்கு வெக்கமா இல்லையா?

ஒரு காலத்தில் தாய்மொழியை காசுக்கு விற்றோம். அதனாலே பலருக்கு அடிமையாய் இருக்கிறோம். மீண்டும் இப்பொழுது நமது தாய் மொழியை விற்று கொண்டுருகிறோம். அதற்கு ஒரு நாள் அடிமையாய் இருப்போம். அனுபவிப்போம்.

அப்பொழுது ஆங்கிலத்தை கல்வி கற்ற நம்மை பார்த்து நமது பேரபிள்ளைகள் நம்மை காரி துப்பும். அதையும் வெக்கமே இல்லாமல் வாங்கி கொண்டு வெளீநாட்டுக்கு வேளைக்கு செல்வோம்.

சரி! அதெல்லாம் போட்டும். கல்வியை வியபாரம பாக்கிற இவங்கள மாதிரி ஆளுங்கள என்ன பண்ரது? சொல்லுங்க!!


குறும்படம் எடுப்பது எப்படி?

நம்மில் பலருக்கு இயகுநர் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும். அதற்கு முதலில் நீங்கள் ஒரு பாடலையோ அல்லது குறும்படத்தையோ எடுக்க வேண்டும். குறும்படம் எடுப்பது பாடலை உருவாக்குவதை காட்டிலும் எளிது. நீங்கள் புகழ் பெறவேண்டும் என்பதற்காகவோ பொழுது போகிற்காகவோக் கூட குறும்படம் எடுக்கலாம்.


குறும்படம் எடுப்பது எப்படி

ஒரு படத்தை எடுப்பதில் முதலில் தேவைபடுவது கதை. அந்த கதையை பொறுத்து தான் உங்கள் பட்ஜட் மற்றும் திறன் வெளிபடும். எக்காரணம் கொண்டும் யாரோ எழுதிய கதையில் நீங்கள் படம் எடுக்காதிர்கள். நீங்கள் உங்களின் கதையை சொந்தமாக தயாரியுங்கள்.

கதை

கதை எழுதுவது அத்தனை எளிதான காரியமல்ல. அது எத்தனை மடங்கு சுவரசியாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் இருக்கிறதோ, அத்தனை மக்களை கவரும். குறும்படத்தை 10 முதல் 25 நிமிடங்களுள் முடிக்கும்படியான கதையை எழுதுகங்கள். அந்த கதை கருத்து சொல்லுபவையாகவும் இருக்கலாம். வெறும் பொழுது போக்கிற்காகவும் இருக்கலாம்.அது அன்பு, நகைசுவை, சண்டை, திகில் என எப்படியும் இருக்கலாம். ஆனால், ஒரே குறும்படத்தில் அனைத்தையும் சேர்காதீர்கள். நேரமும் போதாது. கதையும் புரியாது.

உங்களின் கதை எத்தனை மடங்கு சக்தி வாய்ந்தது என அறிய வேண்டுமா. அதற்கு முதலில் ஒரு ப்ளாகை திறங்கள். அதில் நீங்கள் 5 கதை வரை எழுதுங்கள். ஒவ்வொன்ரும் ஒரு நாள் இடைவெளியில் ஒரே நேரத்தில் வெளியிடுங்கள். பின் எல்லா கதைகளையும் ஒரே நேரத்தில் சமுக வலைதளங்களிலும் திரட்டிகளிலும் வெளியிடுங்கள். எந்த கதை அதிக கருத்துகளையும் பார்வைகளையும் பெறுகிறதோ அது தான் மிக சக்தி வாய்ந்த கதை.

நடிகர்கள்

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட எத்தனையோ படங்கள் ஓடவில்லை. காரணம், அதில் இருக்கும் மோசமான நடிகர்கள். அதை உங்கள் கதையில் சேர்த்துவிடாதீர்கள்.பெரும்பாலும் கதை எழுதுபவரே கதையில் ஹீரோவாக நடிப்பார். ஒரே காட்சியை நடிக்கும் முன்பு குறைந்தது 10 முறையாவது தனியே நடித்து பாருங்கள். பின் அது மிக அருமையாக இருக்கும். முகத்தை காட்டாமல் நடிப்பது அத்தனை சிறப்பாக அமையாது. ஆண், பெண் இருபாலரும் நடிக்கும் படம் இருபாலரையும் கவரும். அது அதிக வெற்றி பெறும்.நடிகர்கள் அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருக்க வேண்டும். கதையில் வருபவர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் சரியான வயது, நிறம், உயரம், அழகு மற்றும் திறமை இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். அழகு மற்றும் உயரம் நீங்கள் தேர்வு செய்யும் கதையை பொறுத்தே அமையும்.
சண்டை காட்சிகளுக்கு ஆண்களும், திகில் கதைகளுக்கு பெண்களும், நகைச்சுவை காட்சிகளுக்கு இருபாலரும் இருப்பது நலம்.

நேரம்

சில குறும்படங்கள் மிகுந்த நேரம் எடுத்து கொண்டாலும், அது வெற்றி பெறாது. சில சின்னதாக இருந்தாலும் விரும்பும் வண்ணம் இருக்கும். இந்த இரண்டுமே தவறு.உங்கள் படம் 10 முதல் 25 நிமிடங்களுள் இருத்தலே நலம். படத்தின் பெயர், நடிகர்களின் பெயர் போடவேண்டுமெனில் அதை 50 நொடிகள் உள்ளையே முடித்து கொள்ளுங்கள்.

இசை

இது தான் உங்கள் குறும்படத்தின் மிக கடினமான விஷயம். இதற்கு ஒரு தனி ரூம் அல்லது ஸ்டுடியோ தேவைப்படும். அது முடியாவிட்டால் ஒரு கைபேசியாவது தேவைப்படும். எக்காரணம் கொண்டும் YouTubeல் கொடுக்கும் இசையையோ அல்லது சினிமாவில் வரும் இசையையோ பயன்படுத்தாதீர்கள்.நல்ல தரமான, புதுமையான, கதைகேற்ற இசையை பயன்படுத்துங்கள். இசையை இல்லாமலும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதையும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

ஒளிபதிவு

மேல் சொன்ன மூன்றுமே இல்லாமல் வெற்றி பெற்ற படங்களும் உள்ளன. அதற்கு காரணம் அசைக்க முடியாது ஒளிபதிவே. அதை எப்படி என்று நான் விளக்கி சொல்லுகிறேன்.


 • சூரியனுக்கு எதிர்திசையில் வைத்து படம் எடுத்தல் நன்று.
 • Cameraவிக்கு மேலே ஒரு அட்டையையோ அல்லது காகிதத்தையோ பிடித்தல் நன்று.
 • உங்கள் நடிகர்களின் உடையை இருக்கமாக அணிய சொல்லுங்கள்.
 • மூக்கு மற்றும் காதை தனித்து காட்ட கூடாது. கண் மற்றும் வாயை எப்பொழுதாவது காட்டுவது சிறந்தது.
 • Cameraவை ஆட்டாமல் முடிந்தவரை நேராக பிடியுங்கள்.
 • அந்த காட்சி மிக முக்கியம் என்றால், நடிகர்களை நடுவில் நிற்க வையுங்கள். கொஞ்சம் அவசியம்மென்றால் வலபக்கதிலும், தேவையில்லையென்றால் இடபக்கதிலும் நிற்கவையுங்கள்.
 • முடிந்தவரை 16:9 cameraவை பயன்படுத்துங்கள். (கைபேசி கூட போதும்)
 • ஹீரோவை பெரும்பாலும் நடுவில் நிற்கவையுங்கள்.

  பாகம் இரண்டு தொடரும்! -------------- 

குடியிருப்பில் தீ–தமிழ் சிறுகதை

அந்த குடியிருப்பு கட்டிடத்த்தில் அப்படி ஒரு கதறல் சத்தம். கல்லை கண்ட நாய் ஓடியது போல் தீயை கண்ட மக்கள் அலை அலையாக கீழே இறங்கினர். சுமார் 10 மாடி கொண்ட அந்த கட்டிடத்தில் தீ எப்படியோ பற்றி கொண்டது.அனைவரும் கதரியடித்து கொண்டு ஓடி வந்தனர். ஒரு வழியாக தீ முழுவதும் பரவுவதற்குள் அனைவரும் கீழே இறங்கிவிட்டனர். இது எதுமே தெரியாமல் இரண்டு பிஞ்சு செஞ்சங்கள் மேலே கொஞ்சி விளையாடி கொண்டிருந்தன. அது ஒரு தாயும் அவளின் ஆறு மாத குழந்தையும் தான்.

எதுவுமே தெரியாமல் படுகையறையில் ஒருவறை ஒருவர் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தனர். அந்த தாய் நினைத்தால், “என் உயிர் பிரிவதாய் இருந்தால் கூட அது உன் கண்களை பார்த்து கொண்டு தான் நடக்க வேண்டும்” என்று. அப்பா இல்லாத அந்த குழந்தைக்கு, அவள் தான் கடவுள்.

அப்பொழுது ஏதோ கருகும் வாடை வந்தது. அதை முகர்ந்த அவள் வேகமாக ஜன்னலை திறந்து பார்த்தாள். கீழே இருந்த அனைத்து கட்டிடங்களும் எரிந்து கொண்டிருந்தன. மக்கள் எப்படியாவது வந்துவிடு என்று சொன்னர். கீழே சுமார் ஆயிரம் பேர் திரண்டிருப்பர். படிகட்டிலும் தீ என்பதால் அவள் எப்படி கீழே போவது என்று தெரியாமல் தவித்தாள்!

அப்பொழுது அவள் மாடியிலிருந்து கத்தினாள் ”தன் குழந்தையை மட்டுமாவது எப்படியாவது மீட்டுவிடுங்கள்” என்று. இதை கேட்டவர்கள் திகைத்தனர். குழந்தையை எப்படி கீழெ அனுப்புவது என்று தெரியாமல் தவித்தனர்.அப்பொழுது கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது. அது ஒரு 25 வயதுடைய இளைஞனின் குரல்.

அவன் குழந்தையை மேலே இருந்து கீழே போடுமாறு கேட்டுகொண்டான். இதை கேட்ட தாயும் மக்களும் திகைத்துவிட்டனர். ”இது என்ன சாத்தியமா” என்று மக்களும் தாயும் தங்களுக்குள்ளே கேட்டு கொண்டனர். அவன் ”தான் ஒரு கால்பந்தாட்ட கோல் கீப்பர்” என்று தன்னை கூறிகொண்டான்.

தான் இதுவரை பலநூறு பந்துகளைப் பிடித்தாகவும் கூறினான்.போதகுறைக்கு தன் பையில் இருந்த கால்பந்தாட்ட கையுறையை அடையாளத்துக்கு எடுத்து காட்டினான். இதை கேட்ட அனைவரும் அவன் மேல் கோபம் கொண்டனர். ஆனால் தாய்கோ மணம் மாறியது. தான் இறந்தாலும் தன் குழந்தை வாழவேண்டும் என்று நினைத்தாள்.

“இறைவனே காப்பாத்து!” என்று நினைத்த படியே குழந்தையை கீழே தூக்கி போட்டாள்.கீழே அவன் நின்று கொண்டிருந்த இடத்துக்கும் அந்த குழந்தை விழ நோக்கி வந்த இடத்துக்கும் பல அடிகள் வித்தியாசம் இருந்தது. அனால், அவன் குதித்து பிடித்து அந்த குழந்தையை பிடித்தான்.

இப்பொழுது கூட்டத்தின் குரல் மாறியது. அவன் பெயர் தெரியாததனால் “வாழ்க கோல்கீப்பர்!” என்று கத்தினர். இதை கேட்ட அவனுக்கு தான் ஒரு மைதானத்தில் இருப்பது போன்ற எண்ணம் தோண்றியது. மைதானாத்தில் பந்தை தன் தலைக்கும் மேல் தூக்குவர். அதேப் போல் அந்த குழந்தையை தன் தலைக்கு மேல் தூக்கினான்.

பின் பந்தை தன் காலை நோக்கி போட்டு அதை தன் காலால் அடிப்பர். அதே போல் அந்த குழந்தையை தன் காலை நோக்கி போட்டு தன் காலால் அடித்து கொன்றான்.


கவிதை வடிவில் திருகுறள் [அதிகாரம் - கல்வி]கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.

கல்வியை பிழையின்றி கல்
பின் கற்ற கல்வி படி வாழ்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணும் எழுத்தும் தான் உன் கண்
அதை கற்காவிட்டால் நீ வெறும் மண்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 

புண்ணுடையர் கல்லா தவர்

கல்வி கற்ற குருடனுக்கும் கண்ணு தெரியும்
கல்லாத மூடனுக்கு குருடு தான் தெரியும்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் 

அனைத்தே புலவர் தொழில்.

புலவர் பார்க்கும் பொழுது மகிழ்விப்பார்
பிரியும் பொழுது முகம் காட்டமாட்டார்
அவரது வருத்தம் நமக்கு தெரிய கூடாது என்று

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 

கடையரே கல்லா தவர்.

ஆசிரியரிடம் மாணவனுக்கு தேவை பணிவு
அப்படி கற்ற கல்வியே அவனுக்கு அளிக்கும் உயர்வு

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத் தூறும் அறிவு.

நிலத்தை தோண்டினால் கிடைப்பது நீர்
புத்தகத்தை தோண்டினால் வாழ்வில் உயர்விர்


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 

சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றவனை உலகமே புகழும் என தெரியும்
இருந்தும் கல்லாதவன் வாழ்கை அழியும்


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப் புடைத்து.

நீ படிப்பதோ ஒரு முறை தான்
ஆனால், காப்பதோ ஏழு தலைமுறை


தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந் தார்.

கல்வியின் இன்பம் உலகிடம் பரவும்
அதை கண்ட சான்றோர் மணம் மகிழும்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 

மாடல்ல மற்றை யவை.

அழிவற்ற ஒரே செல்வம் கல்வி
வேற எந்த செலவமும் நிலைக்காது அறிவீர்

ஜூதனின் முகம்–தமிழ் சிறுகதை

பல நூற்றாண்டுகளுக்கு முன் , ஒரு மிக சிறந்த ஓவியர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பிரபலமான கலைஞர். அவர் “இயேசுவின் வாழ்கை” என்னும் தலைப்பில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தை ஏறதாழ முடித்துவிட்டார்.ஆனால், இன்னும் சில பகுதிகள் வரையபடாமல் இருந்தன. அவற்றில் ஒன்று குழந்தை இயேசுவின் முகம். மற்றொன்று ஜூதரின் முகம். பல நாட்கள் தேடியும் அதற்கு ஏற்ற முகம் கிடைக்காததால் ஒவியம் இன்னும் முழுமையடையவில்லை.

இயேசுவின் முகம் மிகவும் புனிதமாக இருக்க வேண்டும். அது அழகாகவும் பல புண்ணியம் செய்தவையாகவும் இருக்க வேண்டும். ஜூதரின் முகமோ மிகவும் கொடுரமாக இருக்க வேண்டும். பல பாவங்கள் செய்தது போலவும், பொறமை குணம் மிக்கது போலவும் இருக்க வேண்டும்.
ஒரு நாள் அவர் நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியின் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு பல சிறுவர்கள் ஆர்வமாக விளையாடி கொண்டிருப்பதை கண்டார். அவர்களில், 12 வயது சிறுவன் ஒருவனின் முகம் ஓவியரை மிகவும் கவர்ந்தது. அவன் மிகவும் அழுக்கான தேவதை போல இருந்தான். ஆனால், அந்த முகம் இயேசுவின் முகத்திற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும். பின் அவனை வீட்டுக்கு அழைத்து வந்து இயேசுவின் முகத்தை வரைந்து முடித்தார்.

ஆனால், இன்னும் ஜீடாசின் முகம் வரையப்படாமல் உள்ளது. அதற்கு பல பேர் வந்தனர். ஆனால், எந்த முகமும் ஓவியருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பல வருட காலம் அந்த முகத்தை தேடி அலைந்தார்.

பல வருடங்களுக்கு பின், அந்த ஓவியர் வீட்டில் அமர்ந்து தேநீர் குடித்து கொண்டிருந்தார்.அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே சென்று கதவை திறந்தார். அங்கு ஒருவன் “குடிக்க எதாவது தாருங்கள் , தாகமாக இருக்கிறது” என்று மிகவும் பாவமாக கெஞ்சினான். ஒவியருக்கு மிகவும் இன்பம். அவர் பல நாட்களாக தேடி கொண்டிருந்த முகம் அந்த பிச்சை காரனிடம் இருந்தது.

ஓவியர் அவனை உள்ளே அழைத்தார். பின் அவனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். அதை வாங்கிய அவன் டபக் டபக் என்ன குடித்தான். பின் அவனிடம் தான் ஒரு மிக கொடுரமான முகத்தை தேடுவதாகவும் அது அவனிடம் உள்ளது என்று அவர் சொன்னார். இதை கேட்ட அவன் மெல்ல சிரித்தான்.

பின் அவனை பல மணி நேரம் நிற்க செய்தார். மிகவும் மெதுவாகவும் கச்சிதமாகவும் ஓவியத்தை வரைந்து முடித்தார். அவர் அவனிடம் நன்றி சொல்லுவதற்குள் அவன் வெளியே செல்ல முயன்றான். அதை மிக வேகமாக ஓடி சென்று தடுத்து நிருத்தினார் ஓவியர்.

ஓவியர் அவனிடம் , “நீ ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாய்? காசு கூட வாங்காமல் இருக்கிறாய்” என்று கேட்டார். அவன் “என்னை தெரிகிறதா?” என்று கேட்டான். அதற்கு தெ்ியவில்லை என்றார். அவன் சிரித்தப்படி சொன்னான் “என்னை உங்களுக்கு தெரியவில்லையா? பல வருடங்களுக்கு முன் நான் தான் உங்களுக்கு இயேசுவாக முகபாவனை காட்டினேன்!!!”.

கருத்து :   நண்பா! எல்லாம் கொஞ்ச காலம்

 

Blogger news

Blogroll

Blogger இயக்குவது.