About Geeks Gadget Theme

Blogger Widgets

ஜூதனின் முகம்–தமிழ் சிறுகதை

பல நூற்றாண்டுகளுக்கு முன் , ஒரு மிக சிறந்த ஓவியர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பிரபலமான கலைஞர். அவர் “இயேசுவின் வாழ்கை” என்னும் தலைப்பில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தை ஏறதாழ முடித்துவிட்டார்.



ஆனால், இன்னும் சில பகுதிகள் வரையபடாமல் இருந்தன. அவற்றில் ஒன்று குழந்தை இயேசுவின் முகம். மற்றொன்று ஜூதரின் முகம். பல நாட்கள் தேடியும் அதற்கு ஏற்ற முகம் கிடைக்காததால் ஒவியம் இன்னும் முழுமையடையவில்லை.

இயேசுவின் முகம் மிகவும் புனிதமாக இருக்க வேண்டும். அது அழகாகவும் பல புண்ணியம் செய்தவையாகவும் இருக்க வேண்டும். ஜூதரின் முகமோ மிகவும் கொடுரமாக இருக்க வேண்டும். பல பாவங்கள் செய்தது போலவும், பொறமை குணம் மிக்கது போலவும் இருக்க வேண்டும்.
ஒரு நாள் அவர் நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியின் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு பல சிறுவர்கள் ஆர்வமாக விளையாடி கொண்டிருப்பதை கண்டார். அவர்களில், 12 வயது சிறுவன் ஒருவனின் முகம் ஓவியரை மிகவும் கவர்ந்தது. அவன் மிகவும் அழுக்கான தேவதை போல இருந்தான். ஆனால், அந்த முகம் இயேசுவின் முகத்திற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும். பின் அவனை வீட்டுக்கு அழைத்து வந்து இயேசுவின் முகத்தை வரைந்து முடித்தார்.

ஆனால், இன்னும் ஜீடாசின் முகம் வரையப்படாமல் உள்ளது. அதற்கு பல பேர் வந்தனர். ஆனால், எந்த முகமும் ஓவியருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பல வருட காலம் அந்த முகத்தை தேடி அலைந்தார்.

பல வருடங்களுக்கு பின், அந்த ஓவியர் வீட்டில் அமர்ந்து தேநீர் குடித்து கொண்டிருந்தார்.அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே சென்று கதவை திறந்தார். அங்கு ஒருவன் “குடிக்க எதாவது தாருங்கள் , தாகமாக இருக்கிறது” என்று மிகவும் பாவமாக கெஞ்சினான். ஒவியருக்கு மிகவும் இன்பம். அவர் பல நாட்களாக தேடி கொண்டிருந்த முகம் அந்த பிச்சை காரனிடம் இருந்தது.

ஓவியர் அவனை உள்ளே அழைத்தார். பின் அவனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். அதை வாங்கிய அவன் டபக் டபக் என்ன குடித்தான். பின் அவனிடம் தான் ஒரு மிக கொடுரமான முகத்தை தேடுவதாகவும் அது அவனிடம் உள்ளது என்று அவர் சொன்னார். இதை கேட்ட அவன் மெல்ல சிரித்தான்.

பின் அவனை பல மணி நேரம் நிற்க செய்தார். மிகவும் மெதுவாகவும் கச்சிதமாகவும் ஓவியத்தை வரைந்து முடித்தார். அவர் அவனிடம் நன்றி சொல்லுவதற்குள் அவன் வெளியே செல்ல முயன்றான். அதை மிக வேகமாக ஓடி சென்று தடுத்து நிருத்தினார் ஓவியர்.

ஓவியர் அவனிடம் , “நீ ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாய்? காசு கூட வாங்காமல் இருக்கிறாய்” என்று கேட்டார். அவன் “என்னை தெரிகிறதா?” என்று கேட்டான். அதற்கு தெ்ியவில்லை என்றார். அவன் சிரித்தப்படி சொன்னான் “என்னை உங்களுக்கு தெரியவில்லையா? பல வருடங்களுக்கு முன் நான் தான் உங்களுக்கு இயேசுவாக முகபாவனை காட்டினேன்!!!”.

கருத்து :   நண்பா! எல்லாம் கொஞ்ச காலம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Please Comment Your Comment With Your Website To Get hits

 

Blogger news

Blogroll

Blogger இயக்குவது.