About Geeks Gadget Theme

Blogger Widgets

குறும்படம் எடுப்பது எப்படி?

நம்மில் பலருக்கு இயகுநர் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும். அதற்கு முதலில் நீங்கள் ஒரு பாடலையோ அல்லது குறும்படத்தையோ எடுக்க வேண்டும். குறும்படம் எடுப்பது பாடலை உருவாக்குவதை காட்டிலும் எளிது. நீங்கள் புகழ் பெறவேண்டும் என்பதற்காகவோ பொழுது போகிற்காகவோக் கூட குறும்படம் எடுக்கலாம்.


குறும்படம் எடுப்பது எப்படி

ஒரு படத்தை எடுப்பதில் முதலில் தேவைபடுவது கதை. அந்த கதையை பொறுத்து தான் உங்கள் பட்ஜட் மற்றும் திறன் வெளிபடும். எக்காரணம் கொண்டும் யாரோ எழுதிய கதையில் நீங்கள் படம் எடுக்காதிர்கள். நீங்கள் உங்களின் கதையை சொந்தமாக தயாரியுங்கள்.

கதை

கதை எழுதுவது அத்தனை எளிதான காரியமல்ல. அது எத்தனை மடங்கு சுவரசியாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் இருக்கிறதோ, அத்தனை மக்களை கவரும். குறும்படத்தை 10 முதல் 25 நிமிடங்களுள் முடிக்கும்படியான கதையை எழுதுகங்கள். அந்த கதை கருத்து சொல்லுபவையாகவும் இருக்கலாம். வெறும் பொழுது போக்கிற்காகவும் இருக்கலாம்.



அது அன்பு, நகைசுவை, சண்டை, திகில் என எப்படியும் இருக்கலாம். ஆனால், ஒரே குறும்படத்தில் அனைத்தையும் சேர்காதீர்கள். நேரமும் போதாது. கதையும் புரியாது.

உங்களின் கதை எத்தனை மடங்கு சக்தி வாய்ந்தது என அறிய வேண்டுமா. அதற்கு முதலில் ஒரு ப்ளாகை திறங்கள். அதில் நீங்கள் 5 கதை வரை எழுதுங்கள். ஒவ்வொன்ரும் ஒரு நாள் இடைவெளியில் ஒரே நேரத்தில் வெளியிடுங்கள். பின் எல்லா கதைகளையும் ஒரே நேரத்தில் சமுக வலைதளங்களிலும் திரட்டிகளிலும் வெளியிடுங்கள். எந்த கதை அதிக கருத்துகளையும் பார்வைகளையும் பெறுகிறதோ அது தான் மிக சக்தி வாய்ந்த கதை.

நடிகர்கள்

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட எத்தனையோ படங்கள் ஓடவில்லை. காரணம், அதில் இருக்கும் மோசமான நடிகர்கள். அதை உங்கள் கதையில் சேர்த்துவிடாதீர்கள்.



பெரும்பாலும் கதை எழுதுபவரே கதையில் ஹீரோவாக நடிப்பார். ஒரே காட்சியை நடிக்கும் முன்பு குறைந்தது 10 முறையாவது தனியே நடித்து பாருங்கள். பின் அது மிக அருமையாக இருக்கும். முகத்தை காட்டாமல் நடிப்பது அத்தனை சிறப்பாக அமையாது. ஆண், பெண் இருபாலரும் நடிக்கும் படம் இருபாலரையும் கவரும். அது அதிக வெற்றி பெறும்.



நடிகர்கள் அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருக்க வேண்டும். கதையில் வருபவர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் சரியான வயது, நிறம், உயரம், அழகு மற்றும் திறமை இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். அழகு மற்றும் உயரம் நீங்கள் தேர்வு செய்யும் கதையை பொறுத்தே அமையும்.
சண்டை காட்சிகளுக்கு ஆண்களும், திகில் கதைகளுக்கு பெண்களும், நகைச்சுவை காட்சிகளுக்கு இருபாலரும் இருப்பது நலம்.

நேரம்

சில குறும்படங்கள் மிகுந்த நேரம் எடுத்து கொண்டாலும், அது வெற்றி பெறாது. சில சின்னதாக இருந்தாலும் விரும்பும் வண்ணம் இருக்கும். இந்த இரண்டுமே தவறு.



உங்கள் படம் 10 முதல் 25 நிமிடங்களுள் இருத்தலே நலம். படத்தின் பெயர், நடிகர்களின் பெயர் போடவேண்டுமெனில் அதை 50 நொடிகள் உள்ளையே முடித்து கொள்ளுங்கள்.

இசை

இது தான் உங்கள் குறும்படத்தின் மிக கடினமான விஷயம். இதற்கு ஒரு தனி ரூம் அல்லது ஸ்டுடியோ தேவைப்படும். அது முடியாவிட்டால் ஒரு கைபேசியாவது தேவைப்படும். எக்காரணம் கொண்டும் YouTubeல் கொடுக்கும் இசையையோ அல்லது சினிமாவில் வரும் இசையையோ பயன்படுத்தாதீர்கள்.



நல்ல தரமான, புதுமையான, கதைகேற்ற இசையை பயன்படுத்துங்கள். இசையை இல்லாமலும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதையும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

ஒளிபதிவு

மேல் சொன்ன மூன்றுமே இல்லாமல் வெற்றி பெற்ற படங்களும் உள்ளன. அதற்கு காரணம் அசைக்க முடியாது ஒளிபதிவே. அதை எப்படி என்று நான் விளக்கி சொல்லுகிறேன்.


  • சூரியனுக்கு எதிர்திசையில் வைத்து படம் எடுத்தல் நன்று.
  • Cameraவிக்கு மேலே ஒரு அட்டையையோ அல்லது காகிதத்தையோ பிடித்தல் நன்று.
  • உங்கள் நடிகர்களின் உடையை இருக்கமாக அணிய சொல்லுங்கள்.
  • மூக்கு மற்றும் காதை தனித்து காட்ட கூடாது. கண் மற்றும் வாயை எப்பொழுதாவது காட்டுவது சிறந்தது.
  • Cameraவை ஆட்டாமல் முடிந்தவரை நேராக பிடியுங்கள்.
  • அந்த காட்சி மிக முக்கியம் என்றால், நடிகர்களை நடுவில் நிற்க வையுங்கள். கொஞ்சம் அவசியம்மென்றால் வலபக்கதிலும், தேவையில்லையென்றால் இடபக்கதிலும் நிற்கவையுங்கள்.
  • முடிந்தவரை 16:9 cameraவை பயன்படுத்துங்கள். (கைபேசி கூட போதும்)
  • ஹீரோவை பெரும்பாலும் நடுவில் நிற்கவையுங்கள்.

  பாகம் இரண்டு தொடரும்! -------------- 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Please Comment Your Comment With Your Website To Get hits

 

Blogger news

Blogroll

Blogger இயக்குவது.