About Geeks Gadget Theme

Blogger Widgets

உலக தமிழ் தலைவன் பாரதியார்

ஒரு துளி பேனா மை 10 கோடி பேரை மாற்றும் என்பதை நிறுபித்தவர் பாரதியார். எழுத்தாற்றல் மூலம் இந்தியாவையும் தமிழையும் அடுத்த கட்டத்துக்கு இழுத்து சென்றவர் இவர். இவரின் புகழ் சொல்ல என் ஒரு ஆயுள் போதாது. எனினும், சுருக்கமாக சில பத்திகளில் சொல்கிறேன்! கேளுங்கள்

 

மகாகவி பாரதியார்

இன்று 25 வயது இளைஞனை தமிழில் ஒரு கவிதை எழுத சொன்னால் கூட திணருவான். அந்த இழிநிலைக்கு காரணம் அவன் மட்டுமல்ல. அவன் வாழ்ந்த சமுகமும் தான். இதை விட மோசமான சமுகம் அன்று இருந்தது. ஆனால், அன்றே 11 வயதில் கவி பாட ஆரம்பித்தவர் தான் இந்த பாரதியார்.

 

அப்படி என்ன சாதித்தார்

அந்த காலத்தில் புலமையையே வாழ்கையாக கொண்டவர்கள் பல லட்சகணக்காணோர். ஆனால், 19-20ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான கவிஞர் இவர் தான். இவரின் கவிதைகள் ஹிட்லரை கூட புத்தர் ஆக்கும் சக்தி படைத்தது. ஆனால், அவை யாவும் அரசாங்கத்திற்கு எதிராக இருந்தது.

அதனால் அவர் வாழும் வரை அவரின் புகழ் உலகிற்கு தெரியாமல் போனது. ஆனால், அவர் மறைந்த பிறகு அவரின் புகழ் உலகின் மறுமுனையில் இருக்கும் அமேரிக்க வரை பரவியது. அவர் தன் தாய்நாடு மற்றும் நாய்மொழி மீது கொண்ட பற்று கடலைவிட பெரியது. இவர் பாடலில் இருக்கும் உவமைகள் மற்றும் இலக்கணங்கள் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

 

புலவர்

இவருக்கு உலகின் மற்ற புலவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பெரும்பாலான புலவர்கள் ஒரே மொழியை கற்று கொண்டு அது தான் உயர்ந்தது என புலம்புவர். சிலர் தன் தாய்மொழியை விட்டு பிற நாய் மொழியை தேடி செல்லுவர். இந்த இரண்டு குள்ளநை கூட்டங்களிலும் பாரதியார் சேரமாட்டார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். எனினும் தன் தாய்மொழியை ஒரு பொழுதும் விட்டுகொடுக்க மாட்டார். தாய்மொழிக்கே தன் அனைத்து தொண்டுகளையும் செய்தார். என்ன ஆனாலும், மற்ற மொழி புலவர்களையோ நாட்டினரையோ பழிக்க மாட்டார்.

 

புதுகவிதை பாரதியார்

திருவள்ளுவரும் கம்பரும் அதிமேதாவியாக இருக்கலாம். ஆனால், திருக்குறளையும் கம்பராமயணத்தையும் கற்பவர்கள் அனைவரும் திறமைசாலி என கூறமுடியாது. சங்க காலத்து புலவர்கள் தமிழ் இலக்கணத்தை சிறிது விட்டு கொடுக்க மாட்டனர். இதனால், கல்வி கற்காத முட்டாள்களுக்கு இலக்கியத்தின் சுவை எட்டாக்கனியாகவே இருந்தது.

பாரதியாரைப் பற்றி சிவகுமார்

அதை தகர்ந்தெரிந்தவர் பாரதியார். அவரின் படைப்புகள்  எல்லோருக்கும் புரியும். மிக எளிமையாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை எளிமையாக்கிய பெருமை இவரையே சாரும். அவர் எழுதிய புதுகவிதைகளில் சில

 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி

 

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

 

சக்திப் பேய் தான் தலையொடு தலைகள் முட்டிச்
சட்டச் சட சட சடவென்றுடைபடு தாளம் கொட்டி அங்கே
எத்திகினிலும் நின்விழி அனல் போய் எட்டித்
தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை

 

நாட்டுபணி

நாட்டுபற்று என்பது மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவசியமானது. இவர் நாட்டுகாக கத்தியும் தூக்கவில்லை. துப்பாக்கியையும் தூக்கவில்லை. இவர் எடுத்தது அவற்றை விட கூர்மையான ஆயுததை; அதைவிட வலிமையானவற்றை : பேணா.

அவர் நாட்டுக்கு செய்த பணி தன் பேணாவை கொண்டு தான். அவர் நாட்டுமக்களை வெறும் செய்தி தாள்கள் மூலம் எழுச்சியடைய செய்தார். சுதேசிமித்திரன் என்னும் இதழ் மூலம் தமிழ் நாட்டையே தலைகீழாக மாற்றினார்.

அவரின் புகழ்பெற்ற கவிதைகள்:

பட்டினில் உடையும் பஞ்சினில் ஆடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்."

வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

 

நான் அவரை மாதிரி ஒரு கலைஞன் பிறக்க வாய்பே இல்லை என்று பொய் சொல்லவில்லை. என்றும் ஒரு கலைஞனை மிஞ்சும் இன்னொரு கலைஞன் பிறக்க தான் செய்வான். இது இயற்கை.

பாரதியாரை போற்றும் கவிஞர் வாலி

ஆனால் எவ்வித முதலீடுமின்றி 10 கோடி மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டிய மகான் இவர் மட்டும் தான். இவருக்காக ஒரு நிமிடம் தலைவணங்குவோம். பாரதியார் என் தலைவன் என்று தலை நிமிர்த்தி சொல்லுவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Please Comment Your Comment With Your Website To Get hits

 

Blogger news

Blogroll

Blogger இயக்குவது.